என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தெப்பத்தேர் நிகழ்ச்சி நடத்த வருவாய் கோட்டாட்சியர் அனுமதி
- திருச்செங்கோட்டில் ஐப்பசி மாதத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- அலங்கரிக்கபட்ட புஷ்ப பல்லாக்கில் திருவீதி உலா வந்து அம்மன், மின்விளக்கு வெளிச்சத்தில் தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோட்டில் ஐப்பசி மாதத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு பொங்கல் விழாவின்போது அலங்கரிக்கபட்ட புஷ்ப பல்லாக்கில் திருவீதி உலா வந்து அம்மன், மின்விளக்கு வெளிச்சத்தில் தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்.
இந்த நிகழ்ச்சி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தெப்பக்குளத்தில் வறட்சியால் தண்ணீர் இல்லாத காரணத்தால் குளம் சீரமைப்பு பணிக்காக நிறுத்தபட்டது. தற்போது மழை காரணமாக தெப்பகுளத்தல் தண்ணீர் நிரம்பி உள்ளது.
இதையடுத்து தெப்ப உற்சவம் மீண்டும் நடத்த வேண்டும் என ெபாதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை வைக்கபட்டதை அடுத்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் நகராட்சி சேர்மேன் நளினி, நகராட்சி ஆணையாளர் கணேசன், நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் குணசேகரன்,நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தமிழ்செல்வி, இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் சுரேஷ், சிவாச்சரியார்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோ சனைக்கூட்டதிற்கு பின்பு தெப்ப உற்சவம் நடைபெற அனுதி அளிக்கபட்டது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்பு தெப்ப உற்சவம் நடைபெற அனுமதி கிடைக்க பெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தெப்பத்தேர் நிகழ்ச்சி நாளை ( வெள்ளிக்கிழமை) மாலை 4மணிக்கு தொடங்குகிறது.