என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![நீலகிரியில் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த ரூ. 5 கோடி ஒதுக்கீடு-கலெக்டர் அம்ரித் அறிவிப்பு நீலகிரியில் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த ரூ. 5 கோடி ஒதுக்கீடு-கலெக்டர் அம்ரித் அறிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/06/26/1905094-0027collectorjpg.webp)
நீலகிரியில் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த ரூ. 5 கோடி ஒதுக்கீடு-கலெக்டர் அம்ரித் அறிவிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சிறப்பு முகாம்கள் ஜூன் 26-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது.
- குளிா்பதன கிடங்கு விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.
இது குறித்து அவா் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-
நீலகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடையும் வகையில் வட்டார அளவில் சிறப்பு முகாம்கள் ஜூன் 26-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது. இயற்கை வேளாண்மைக்காக தோட்டக்கலைத் துறை மூலம் நடப்பு ஆண்டில் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வழி காட்டு நெறிமுறை களின்படி மாதந்தோறும் அங்கக வேளாண்மைக்கான கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தோட்டக்கலைத் துறையி ன்கீழ் அரசு ரோஜா பூங்கா அருகில் அமைந்துள்ள குளிா்பதன கிடங்கு விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
தனியாா் விற்பனை நிலையங்களில் உரத்தின் விலை கடந்த ஓராண்டில் அதிக அளவில் உயா்ந்து ள்ளதாக தகவல் வந்த நிலையில், அங்கு ஆய்வு செய்யுமாறு சம்பந்த ப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை யையொட்டி அபாயக ரமான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளை களை வெட்டுவதற்காக வருவாய்த் துறை அலுவ லா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறையின் மூலம் 2023-24 ஆம் ஆண்டில் தேசிய தோட்ட க்கலை இயக்கம் திட்டத்தி ன்கீழ் நிழல்வலை குடில் 50 சதவீதம் மானியத்தில் அமைக்கவும், 2023-2024 ஆம் ஆண்டில் 20 யூனிட் தேனீ வளா்ப்பு க்கும் இலக்கு நிா்ணயிக்கப்ப ட்டுள்ளது.
எனவே, தேவைப்படும் விவசாயிகள் விண்ண ப்பித்து பயன்பெறலாம். கடந்த ஆண்டு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 274 தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிறப்புப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் ஆயிரம் தேயிலை அறுவடை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் உழவா் உற்பத்தியாளா் சந்தைக்கு சி.சி.டி.வி. காமிரா மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.