search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சருக்கு, நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் மனு
    X

    முதல்-அமைச்சருக்கு, நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் மனு

    • கடந்த 2017-ம் ஆண்டு முதல் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதிவருகிறது.
    • மீன் வளடெக்னாலஜி, கோஸ்டல் என்ஜினியரிங் ஆகிய படிப்புகளை தகுதியாக சேர்த்துள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ராமசாமி முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், பி.டெக் மீன்வள பொறியியல் முடித்தவர்களை மீன்வள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் பணிக்கு டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு முதல் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதிவருகிறது.

    இந்நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி மீன்வள உதவி ஆய்வாளர் 24 பணியிடத்திற்கும், மீன்வள ஆய்வாளர் 64 பணியிடத்திற்கும் தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதில் மீன் வளடெக்னாலஜி (டிப்ளமோ நிலை), கோஸ்டல் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளை தகுதியாக சேர்த்துள்ளது.

    மீன்வள பொறியியல் படித்தவர்களை மேற்கண்ட தேர்வுக்கு தகுதியாக சேர்க்காதது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர், மீன்வளத்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுத்து மீன்வள பொறியியல் படித்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையெனில் கடந்த ஜந்து ஆண்டுகளாக படித்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×