search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணம் கோட்டம் சார்பில் இன்று 750 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    கும்பகோணம் கோட்டம் சார்பில் இன்று 750 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • 300 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • கைப்பேசி செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் இன்று (புதன்கிழமை) 750 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் தங்களது ஊா்களுக்கு திரும்புவதற்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, மன்னாா்குடி, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்து றைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்க ளிலிருந்து சென்னைக்கு 450 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேப்போல் கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து கோவை, திருப்பூருக்கும், மதுரை, தஞ்சாவூா், வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய ஊா்களிலிருந்து திருச்சிக்கும் 300 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூா், ஜெயங்கொண்டம், அரியலூ ரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்து றைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூா், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும் பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயணிகள் இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    மேலும் கைப்பேசி செயலி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×