search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
    X

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

    • கோவையில் 6.89 லட்சம் பெண்கள் பதிவு செய்துள்ளனர்.
    • இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற இரண்டு கட்டமாக விண்ணப்பங்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடந்தது.

    முதல், இரண்டாம் கட்டமாக நடைபெற்ற 1401 முகாம்களில் இதுவரை ஆனைமலையில் 42,731, அன்னூரில் 43,509, கோவை வடக்கில் 16,0160, தெற்கில் 75,409, கிணத்துக்கடவில் 23,346 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    அதேபோல், மதுக்கரை யில் 61,827, மேட்டுப்பா ளையத்தில் 58,072, பேரூரில் 76,025, பொள்ளாச்சியில் 62,306, சூலூரில் 73,300, வால்பாறையில் 12577 விண்ணப்பங்கள் என மொத்தம் 11 வட்டங்களில் நடைபெற்ற முகாம்களில் 6,89,262 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இம்முகாம்களில் குடும்ப அட்டைதாரர்கள் சில கார ணங்களால் விண்ணப்பப் படிவம் பெறாமலும், சில குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பப் படிவம் பெற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட முகாம்களில் சமர்ப்பிக்காமலும் இருப்பது தெரியவந்தது.

    முதல்வரின் உத்தர வின்படி வருவாய்த் துறையின் கீழ், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத் திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும், இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும், ஏற்கெனவே விண்ணப்பம் பெற்று பதிவு செய்ய தவறியவர்களும் பதிவு செய்ய 3 நாள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று தொடங்கிய முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது. அதன்படி விண்ணப்பத்தை பதிவு செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.

    இன்றும், நாளையும் நடைபெறும் முகாமில் விண்ணப்பிக்காத தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்ப டுத்திக் கொள்ளலாம்.ஏற்கெனவே முதல், இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெறும் அதே இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    விண்ணப்பப் படிவங்கள் பெறாத குடும்ப அட்டை தாரர்கள் அவர்களுக்குரிய முகாம் நடைபெறும் இடங்களில் முகாம் பொறுப்பு அலுவலரிடம் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து அதே முகாமில் அளித்து பயனடையலாம் என கலெக்டர் தெரி வித்துள்ளார்.

    Next Story
    ×