என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கொடைக்கானலில் பனி மூட்டத்தால் சூரியகிரகணத்தை காணமுடியாமல் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் கொடைக்கானலில் பனி மூட்டத்தால் சூரியகிரகணத்தை காணமுடியாமல் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்](https://media.maalaimalar.com/h-upload/2022/10/26/1781842-1352730-3kodaikanal.jpg)
கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வக விஞ்ஞானி எபினேசர் சூரிய கிரகணம் பற்றி விளக்கினார்.
கொடைக்கானலில் பனி மூட்டத்தால் சூரியகிரகணத்தை காணமுடியாமல் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அப்சர்வேட்டரி வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் நேற்று நடைபெற்ற பகுதி நேர சூரிய கிரகணத்தினை காண வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் அதிகளவில் குவிந்தனர்.
- கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காலை முதலே அடர்ந்த மேக மூட்டம் நிலவியதால் பகுதி நேர சூரிய கிரகணம் தென்படவில்லை. சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் விஞ்ஞானிகள் உட்பட அனைவரும் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அப்சர்வேட்டரி வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் நேற்று நடைபெற்ற பகுதி நேர சூரிய கிரகணத்தினை காண வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் அதிகளவில் குவிந்தனர்.
லடாக் மலைப்பிரதேசத்தில் உள்ள ஹேண்ட்லே வான் இயற்பியல் ஆய்வகத்தில் இந்த சூரிய கிரகணம் 55 சதவிகிதம் தெரியவாய்ப்புள்ளதாகவும், திருவனந்தபுரத்தில் 2 சதவிகிதமும், கொடைக்கானலில் ஏறத்தாழ 3 முதல் 4 சதவிகிதமும் தென்படும் எனவும் மேலும் இதைப் பார்க்கும்போது பெரிய மாற்றத்தை நாம் கண்டுபிடிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
கொடைக்கானல் அப்சர்வேட்டரி வான் இயற்பியல் ஆய்வகத்தில் இருந்து ஆய்வாளர்கள் லடாக் மலைப்பிரதேசத்தில் உள்ள ஹேண்ட்லேவிற்கு சென்று உள்ளார்கள் எனவும் இந்த கிரகணம் மாலை 4 மணி 29 நிமிடங்களுக்கு ஆரம்பமாகி இதனுடைய உச்சகட்ட மறைவு நிலை மாலை 5 மணி 30 நிமிடங்களுக்கும், சூரியன் மறையும் போது 5 மணி 48 நிமிடமுமாகும்,
இதனை பாதுகாப்பாக பார்ப்பதற்கு மைலோ பில்டர் மற்றும் பாலிமர் பில்டரில் சூரிய கண்ணாடிகளை தயார் செய்துள்ளதாகவும், இதில் பார்ப்பது மிகவும் பாதுகாப்பானது எனவும் இந்தக் கண்ணாடி இல்லாமல் சூரிய கிரகணத்தினை வெறும் கண்களில் பார்த்தால் கண்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
எனவே இந்தசூரிய கிரகணத்தை பாதுகாப்பு கண்ணாடி அணிந்து நாம் பார்ப்பதால் நமது கண்களுக்கோ நமது உடலுக்கோ எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. மேலும் சூரிய கிரகணத்தின் போது அல்ட்ரா வயலட் கதிர்கள் வரும் என்று சொல்வதெல்லாம் மூடத்தனம், சூரிய கிரகணத்தின் போது நமது ஓசோன் படலமானது அல்ட்ரா வயலட் கதிர்களை வழக்கம்போல் அவைகள் பிடித்துக் கொள்ளும் ஆகவே எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என இங்கு வந்திருந்த பொதுமக்களிடம் விஞ்ஞானி எபினேசர் மற்றும் மற்ற விஞ்ஞானிகளும் விளக்கினர்.
பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் ஆர்வத்துடன் சூரிய கண்ணாடிகளை அணிந்து நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தினை பார்வையிட காத்திருந்த நிலையில்
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காலை முதலே அடர்ந்த மேக மூட்டம் நிலவியதால் பகுதி நேர சூரிய கிரகணம் தென்படவில்லை. எனவே கூடியிருந்த சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் விஞ்ஞானிகள் உட்பட அனைவரும் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மேலும் ஒரு சிலர் மட்டும் வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டு ஒளிபரப்பபட்டிருந்த யூடியூப் நேரலை காட்சிகளை மட்டும் கண்டு ரசித்தும் வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலைய தொலை நோக்கிகளின் பயன்களை கேட்டறிந்தும் திரும்பி சென்றதும் குறிப்பிடத்தக்கது.