என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஏரியில் படகு சவாரி செய்து மகிழந்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகினையும், சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கணிசமாக காணப்படும். வார இறுதி நாட்களில் இந்த கூட்டம் மேலும் அதிகரிக்கும்.தற்போது வார விடுமுறை தினங்க ளான சனி மற்றும் ஞாயிற்று க்கிழமை யையொட்டி நீலகிரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் குவிந்து பூக்கள் மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர்.
ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே ஊட்டி ஏரியில் படகு இல்லம் அமைந்துள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். நேற்று ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
அவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஏரியில் படகு சவாரி செய்து மகிழந்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டி சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்ததுடன் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.






