என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனோரா சுற்றுலா தலத்தில் சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழும் குழந்தைகள்.
மனோராவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- சிறுவர் பூங்கா மற்றும் படகு சவாரி தொடங்கி வைக்கப்பட்டது.
- பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊஞ்சலில் விளையாட வைத்து மகிழ்வித்தனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மனோரா சுற்றுலா தலத்தில் கடந்த ஆண்டு சிறுவர் பூங்கா மற்றும் படகு சவாரி தொடங்கி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது கோடை விடுமுறையில் பேராவூரணி பகுதி மக்கள் மற்றும் பல்வேறு மாவட்ட சுற்றுலா பயணிகள் வேன் மற்றும் கார் மூலம் குழந்தைகளை அழைத்து வந்து கடற்கரையில் அமைந்துள்ள மனோராவை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
மேலும் தங்களது குழந்தை களை சிறுவர் பூங்காவில் அமைந்துள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சலில் விளையாட விட்டு மகிழ்ந்தனர். படகு சவாரி செய்து கடலின் அழகை பார்த்து ரசித்து சென்றனர்.
Next Story






