search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை காமராஜர் மாக்கெட்டில், கடைக்கு வெளியே காய்கறி விற்பனை செய்வதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு
    X

    வெளியே கொட்டி வைத்து காய்கறி வியாபாரம் செய்யும் சிறிய கடை வியாபாரிகள்.

    தஞ்சை காமராஜர் மாக்கெட்டில், கடைக்கு வெளியே காய்கறி விற்பனை செய்வதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு

    • சிறிய கடை வைத்திருப்பவர்களில் சிலர் வெளியே கொட்டி வைத்து வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது.
    • வெளியே காய்கறி வியாபாரம் செய்வதால் பொதுமக்களுக்கு இடையூறு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கனி மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டில் இருந்த கட்டிடங்களை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் கட்டப்பட்டது.

    ரூ.20.26 கோடி செலவில் 4.1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 87 பெரிய கடைகளும், 201 சிறிய கடைகளும் கட்டப்பட்டன.

    கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார்.

    நேற்று முன்தினம் முதல் கடைகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தன. தொடர்ந்து காய்கறி வியாபாரம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மார்க்கெட்டில் சிறிய கடை வைத்திருப்பவர்களில் சிலர் காய்கறிகளை கடைக்குள் வைத்து வியாபாரம் செய்யாமல் வெளியே கொட்டி வைத்து வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது.

    இதனால் மற்ற பெரிய கடைகளில் வியாபாரம் செய்பவர்கள், தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுபோல் வெளியே காய்கறி வியாபாரம் செய்வதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    எனவே இதுபோன்ற செயல்களில் சிறிய கடை வியாபாரிகள் சிலர் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.

    இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×