search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில் திடீர் சாலை மறியல் போராட்டங்களால் போக்குவரத்து பாதிப்பு
    X

    ஆறுமுகநேரியில் நேற்று திடீர் சாலை மறியல் நடந்த போது எடுத்த படம்.


    ஆறுமுகநேரியில் 'திடீர்' சாலை மறியல் போராட்டங்களால் போக்குவரத்து பாதிப்பு

    • ஆறுமுகநேரியில் திடீர் சாலை மறியல் போராட்டங்களால் திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • திடீர் சாலை மறியல் போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கடந்த 2 மாதங்களில் அரசியல் கட்சி அல்லாத பல்வேறு தரப்பினரால் நடத்தப்படும் திடீர் சாலை மறியல் போரா ட்டங்களால் திருச்செந்தூர் - தூத்து க்குடி சாலையில் கடுமை யான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஏற்கனவே இந்த வழியில் மிகுந்த போக்கு வரத்து நெருக்கடி உள்ள சூழ்நிலையில் இப்படி யான போராட்டங்க ளால் பயணிகளும் பொது மக்களும் பெரிதும் சிரமத் துக்கு ஆளாகி வரு கின்றனர்.

    இதனிடையே நேற்று மாலையில் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் மேலும் மற்றொரு ' திடீர்' சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன் கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி ஒரு கும்பலால் பயங்கரமாக தாக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 2 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள தாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாலகுமரேசன் தாக்கப்பட்ட சம்பவத்தில் சதி திட்டம் தீட்டியதாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் உள்ளிட்ட தனி ப்படையினர் ஆறுமுகநேரி காமராஜபுரத்தை சேர்ந்த சாந்தன் மகன் ராஜேஷ் (28) என்பவரை மதுரையில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர்.

    இதனை கண்டித்தும் ராஜேஷ் மீது போலீசார் பொய் வழக்கு போட்டிருப்ப தாக கூறியும் அவரது மனைவி, தாய், அக்காள், அண்ணன் மற்றும் உறவினர்கள் திரண்டு ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து தடைப்பட்டு 4 சாலை களிலும் வெகு தூரத்திற்கு வாகனங்கள் நின்றன. உடனே அங்கு ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்பட போலீ சார் விரைந்து வந்தனர். அவர்களிடம் போராட்ட குழுவினர் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.

    ஆனால் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

    இப்படியான திடீர் சாலை மறியல் போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×