search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீனிவாசராவ் பள்ளியில் போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் - மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
    X

    சீனிவாசராவ் பள்ளியில் சாலைப்போக்குவரத்து விதிமுறைகள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    சீனிவாசராவ் பள்ளியில் போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் - மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

    • ஓடும் பஸ்ஸில் ஏறவோ இறங்கவோ மாட்டேன், பஸ் படிகளில் நின்று பயணிக்க மாட்டேன்
    • பல்வேறு விதிமுறைகள் குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    திருவையாறு:

    திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பள்ளிக் குழந்தைகள் கடைபிடிக்க வேண்டிய சாலை போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மண்டல இயக்குநரகத்தின் ஆலோசனைப்படி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சாலைப் போக்குவரத்து விதிகள் பற்றிய அறிவுரைகளும் உறுதிமொழி ஏற்பும் தொடர்நது இப்பள்ளியில் வழங்கப்படுகிறது.

    பள்ளிசெயலர் ரஞ்சன்கோபால் ஆலோசனையின்படி நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் அனந்தராமன் சாலைப் போக்குவரத்து விதிமுறை உறுதிமொழிகளை வாசிக்க, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.

    சாலையின்இடது புறமாக நடந்து செல்வேன், சாலையின் குறுக்கே கடந்து செல்லாமல் உரிய நடைபாதைகளில் மட்டுமே கடந்து செல்லுவேன், ஓடும் பஸ்ஸில் ஏறவோ இறங்கவோ மாட்டேன், பஸ் படிகளில் நின்று பயணிக்க மாட்டேன்,ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகே மோட்டார் வாகனங்களை ஓட்டுவேன், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவேன், பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பெற்றோரையும் தலைக்கவசம் அணிய வலியுறுத்துவேன் மற்றும் பள்ளிக்கு உரிய நேரத்திற்கு முன்னதாகவே செல்லுவேன் முதலிய 25க்கு மேலான உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×