என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து விதிமீறல்:   துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு
    X

    போக்குவரத்து விதிமீறல்: துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு

    • போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்துகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
    • துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடத்தில் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    தருமபுரி,

    நாடு முழுவதும் வாகனங் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்து களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து போக்கு வரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு அதிரடியாக உயர்த்தியது. இதன்படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர் களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகை யில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

    ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் ரூ.1000 அபரா தம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இதுபோன்று பல்வேறு போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதனை தமிழகத்தில் அமல்படுத்து வது தொடர்பான அரசாணையை கடந்த வாரம் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டார்.

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று முதல் இந்த அபராதம் விதிப்பு நடைமுறைக்கு வந்தது. இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகள் சிலர் மட்டும் ஹெல்மெட் அணிந்தவாறு வாகனங்களை ஓட்டு வருகின்றனர். நிறைய வாகன ஓட்டிகள் தமிழக அரசின் புதிய அரசாணையை கடைப்பிடிக்காமல் செல்வதால் அவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தருமபுரி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், சின்னசாமி மற்றும் ரகுநாத், உள்ளிட்டோர்.

    தருமபுரி 4 ரோடு அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தம், நெசவாளர் காலனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பஸ் நிறுத்தம், பஸ் நிலையம், பெரியார் சிலை உள்ளிட்ட பகுதிகளில் விதிமீறல் அபராத தொகையின் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடத்தில் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    Next Story
    ×