search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
    X

    விவசாயிகளுக்கு, வேளாண் அலுவலர் புனிதா பயிற்சியளித்து பேசினார்.

    விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

    • வரப்புகளில் பயிர்களை பயிர் செய்தும் பயிர்களை நோய்களிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள்.
    • ட்ரைகோகிராமா கைலோனிஸ் வைத்து உயிரியல் முறையில் நோய்களை கட்டுப்படுத்துதல்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே வைத்தியநாதன் பேட்டை கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் அட்மா பயிற்சி முகாம் நடந்தது.வைத்தியநாதன் பேட்டை ஊராட்சி தலைவர் சம்மந்தம் தலைமையில் நடந்த இம்முகாமில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியநாதன் பேட்டை மற்றும் கடுவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிர்களில் பூச்சி நோய் மேலாண்மையில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளின் பங்கு, உயிரியல் முறையில் எவ்வாறு நோய்களை கட்டுப்படுத்துவது, முட்டை ஒட்டுண்ணிகளை பயன்படுத்தியும், வரப்புகளில் பயிர்களை பயிர் செய்தும் பயிர்களை நோய்களிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள், முட்டை ஒட்டுண்ணிகளான ட்ரைகோகிராமா கைலோனிஸ் வைத்து உயிரியல் முறையில் நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து உயிரியல் முறையில் பயிர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று தஞ்சாவூர் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலர் புனிதா எடுத்துக் கூறினார்.

    மேலும் உயிரியல் முறையில் நாம் நோய்களை கட்டுப்படுத்துவதன் மூலம் நம்மால் இயன்றவரை ரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து இயற்கை முறையில் பயிர் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இப்பயிற்சியில் வேளாண்மை அலுவலர் சினேகா மற்றும் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயபிரபா கலந்துகொண்டு தொழில்நுட்பம் குறித்த உரை ஆற்றினர்.

    இப்கோ நிறுவனத்தின் கள அலுவலர் சரவணன் கலந்துகொண்டு நானோ யூரியாவை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப அலுவலர்கள் மங்களேஸ்வரி, சாந்தகுமாரி மற்றும் மணிராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×