என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆத்தூர் அருகே அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
- அட்மா திட்டத்தில் இயற்கை வேளாண்மை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட அளவவில் நடைப்பெற்றது.
- பயிற்சியில் 50 க்கும் மேலான விவசாயிகள் ஆர்வமாக கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் கிராமத்தில் அட்மா திட்டத்தில் இயற்கை வேளாண்மை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட அளவவில் நடைப்பெற்றது. அட்மா திட்ட தலைவர் டாக்டர் செழியன் கலந்துகொண்டு தலைமை வகித்தார்.
வேளண்மை உதவி இயக்குனர் குமாரசாமி முன்னிலை வகித்தார். அவர் கூறுகையில் தற்போது உள்ள ஆத்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகம் இனி தென்னங்குடிபாளையம் சேவை மையத்தில் செயல்படும் என தெரிவித்தார்.
வேளாண்மை அலுவலர் ஜானகி வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படும் திட்ட ங்கள் மானியங்கள் குறித்தும், வேளாண்மை விரிவாக்க மையம் இடுப்பொருட்கள் விபரம், இயற்கை முறை சாகுபடி தொழில்நுட்பங் களை பற்றி கூறினார்.
வட்டார தொழில்நுட்ப மேலளார் சுமித்ரா, சேலம் வேளாண் அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலர் பிரவீன் ஆகியோர் பேசினார்கள். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்பகனூர் துணைத் தலைவர் செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வி, திலகவதி ஆகியோர் செய்து இருந்தனர்.
பயிற்சியில் 50 க்கும் மேலான விவசாயிகள் ஆர்வமாக கலந்துகொண்டு பயன்பெற்றனர். முடிவில் அனைத்து விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.