search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாமாயில் மர சாகுபடி தொழில்நுட்பம் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி
    X

    பாமாயில் மர சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

    பாமாயில் மர சாகுபடி தொழில்நுட்பம் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி

    • 300 ஹெக்டர் பரப்பளவில் பாமாயில் மரம் வைக்க ேதாட்டக்கலை துறைக்கு இலக்கு நிர்ணயம்.
    • பாமாயில் மர சாகுபடி செய்துள்ள சில விவசாயிகள் தங்கள் அனுபவங்கள் குறித்து பேசினர்.

    தஞ்சாவூர்:

    தேசிய சமையல் எண்ணை திட்டம் - எண்ணை பனை(பாமாயில் மரம் ) மூலம் நடப்பாண்டிற்கு ( 2022-23) தஞ்சாவூர் மாவட்டத்தில் 300 ஹெக்டர் பரப்பளவில் பாமாயில் மரம் சாகுபடி செய்வதற்காக தோட்டக்கலைத் துறைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்க–ப்பட்டுட்டுள்ளது. இதனை அடுத்து கோத்ரேஜ் அக்ரோவேட் நிறுவனத்தின் சார்பில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் தஞ்சை அடுத்த ஒரத்தநாடு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு பாமாயில் மர சாகுபடி தொழில்நுட்பம் குறித்து மத்திய மாநில அரசுடன் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்தும் கோத்ரெஜ் அக்ரோவேட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி - (மார்க்கெட் டெவலப்மென்ட் ) முத்துச்செல்வன் விளக்கினார்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றும் கோத்ரேஜ் நிறுவன அதிகாரிகளும், கள பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தோட்டக்கலை அதிகாரிகளின் அனைத்து கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தனர்.

    மேலும் பாமாயில் மரம் சாகுபடி செய்துள்ள சில விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்கள் மற்றும் இந்த திட்டத்தின் மூலம் 2037 -ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை மூலம் விவசாயிகள் அடைகின்ற பலனையும், பாதுகாப்பையும் விளக்கினார்கள். அதனை தொடர்ந்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஒரத்தநாடு அருகில் உள்ள வடக்கூர் கிராமத்தில் பாமாயில் மரம் சாகுபடி செய்து மகசூல் பெற்று வருகின்ற காத்தலிங்கம் என்கின்ற விவசாயியின் வயலை பார்வையிட்டனர்.

    அப்போது தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் இம்மரத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும், அரசின் மானிய திட்டங்கள் குறித்தும் விளக்கினார். இந்த வருடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாமாயில் மர சாகுபடி இலக்கினை முழுமையாக எட்டுவோம் என்று உறுதியளித்தனர்.

    Next Story
    ×