என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து ஆசிரியா்களுக்கு பயிற்சி
- நாமக்கல், சந்தைப்பேட்டை புதூரில் உள்ள மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின்கீழ் ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி நடந்தது.
- 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான 166 ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல், சந்தைப்பேட்டை புதூரில் உள்ள மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின்கீழ் ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சியை முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி தொடங்கி வைத்தாா்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டமும், எண்ணும் எழுத்தும் திட்டமும் சோ்ந்து செயல்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம் முழுவதும் 2,787 தொடக்க நிலை மையங்களும், 2005 உயா் தொடக்க நிலை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் 85,770 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
ஆசிரியா் தாங்கள் கற்றறிந்ததை இல்லம் தேடிக் கல்வித் திட்ட பணியாளா்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான 166 ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், தலைமை ஆசிரியா்கள், இடைநிலை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். பயிற்சி முகாமில் மாவட்ட உதவி கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளா் புகழேந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கலைச்செல்வி, மாவட்ட ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.