search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேச்சேரி அருகே அரசு பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றம்  மாணவர்கள் 9 நாட்களாக நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது
    X

    மேச்சேரி அருகே அரசு பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றம் மாணவர்கள் 9 நாட்களாக நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது

    • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் (வயது 48) வாழதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
    • இரு பள்ளிகளை சேர்ந்த 405 மாணவ- மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

    ேசலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி மல்லிகுந்தம் அருகே வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் (வயது 48) வாழதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். இேதபோல் அங்கிருந்த தலைமை ஆசிரியை ெஜயசித்ரா, வன்னியனூர் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

    இந்த நிலையில் தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி, கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி முதல் வாழதாசம்பட்டி மற்றும் வன்னியனூர் ஆகிய இரு பள்ளிகளை சேர்ந்த 405 மாணவ- மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

    இதனை தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. தொடர்ந்து போராட்டம் 9 நாட்களாக நீடித்தது. இைதயடுத்து சேலம் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மேட்டூர் சப்-கலெக்டர் வீர்பிரதாப்சிங் தலைமையில் வன்னியனூரில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 4 மாதங்களுக்கு வன்னியனூர் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சசி தலைமையில் பள்ளி செயல்படும், அதன்பிறகு சிவகுமாரை பணி அமர்த்த முயற்சி எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது. இதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 9 நாட்களாக நடைபெற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

    Next Story
    ×