search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்துறைப்பூண்டியில், மரக்கன்று நடும் விழா
    X

    மரக்கன்று நடப்பட்டது.

    திருத்துறைப்பூண்டியில், மரக்கன்று நடும் விழா

    • புவி வெப்பத்தை குறைக்க மரம் நடுவது அவசியம்.
    • தூய்மை பாரதம் இயக்கம் மூலம் நகரம் தூய்மையடைகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா இருவார விழாவின் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை வகித்து பேசும்போது, பொதுமக்களிடையே தூய்மை உறுதிமொழி ஏற்றல், திடக்கழிவு மேலாண்மை, இயற்கை முறையில் உரம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், நீர் மேலாண்மை,மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை குறைத்தல், நாப்கின்கள் பயன்ப டுத்துதல், கழிப்பறைகளின் பயன்பாட்டை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. என்றார்.

    திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றினை நட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து பேசும்போது, தூய்மை பாரதம் இயக்கம் மூலம் நகரம் தூய்மையடைகிறது. மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக பூமி வெப்பம் அதிகரித்து வருகிறது.

    இதனால் எதிர்காலத்தில் நாம் பேரிடரில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. எனவே மரங்களை நட்டு 33 சதவீத வனபரப்பை அதிகரித்து பூமியை குளிர்ச்சிபடுத்துவதால் மட்டுமே எதிர்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். ஒவ்வொருவரும் தன் கடமையாக கருதி மரக்கன்று நடுவதை இயக்கமாக கொண்டு செல்லவேண்டும் என்றார்.

    நிகழ்ச்சிக்கு பாலம் சேவை நிறுவனச்செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகராட்சி மேலாளர் சீதாலெட்சுமி, அலுவலர்கள் சிற்றரசு, நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், செந்தில்குமார் மற்றும் மக்கள் கல்வி நிறுவன அலுவலர்கள் திருலோகச்சந்தர், கனகதுர்கா, பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×