என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கோட்டை கருங்குளத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி கோட்டை கருங்குளத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி](https://media.maalaimalar.com/h-upload/2023/06/11/1896490-1vsr.webp)
மரக்கன்றுகளை வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் நட்ட காட்சி.
கோட்டை கருங்குளத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றி யம், கோட்டை கருங்குளம் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதனை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.
திசையன்விளை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பாக 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுவது என முடிவு செய்யப் பட்டுள்ளது.
இதனை தொடங்கும் விதமாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றி யம், கோட்டை கருங்குளம் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமைச்சியார், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ். கெனிஸ்டன், ஒன்றிய கவுன்சிலர்கள் மவுலின், இசக்கி பாபு, கோட்டை கருங்குளம் சொக்கலிங்கம், இடிந்தகரை சந்த்தியாகு, ராஜேஷ், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், வேணுகோபால், காமில், நெடுஞ்சாலைத்துறை துணை பொறியாளர் தினேஷ் மற்றும் அலுவலக ஊழியர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.