என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலை வாங்கித் தருவதாக ரூ. 2 லட்சம் ஆன்லைன் மோசடி
- வேலை வாங்கித் தருவதாக ரூ. 2 லட்சம் ஆன்லைன் மோசடி செய்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.
- ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம்
திருச்சி:
திருச்சி மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி கோவில்பட்டி,களர் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 55 ).
இவர் ராணுவத்தில் கிளார்க்காக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது மொபைல் நம்பருக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்ப்புறத்தில் பேசிய நபர் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணியிடம் இருக்கிறது.
நீங்கள் விரும்பினால் அந்த வேலையை உங்களுக்குப் பெற்றுத் தருகிறேன் என கூறினார்.
ரூ.2 லட்சம் மோசடி
இதனை ரங்கசாமியும் நம்பினார். அதன் பின்னர் அந்த மர்ம நபர் பணி நியமன ஆணை பெறுவதற்கான நடைமுறைகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என கூறி அவ்வப்போது கூகுள் பே மூலம் தனது வங்கி கணக்குக்கு ரூ. 2 லட்சத்து 12 ஆயிரம் பெற்றுள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரங்கசாமி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு வழக்குப் பதிவு செய்து ராணுவ வீரரிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த மர்ம ஆசாமியை தேடி வருகிறார்.






