search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி
    X

    திருச்சியில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி

    • திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள், பேத்தி தீக்குளிக்க முயற்சி செய்தனர்
    • பாதுகாப்பு நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்

    திருச்சி,

    திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதை.தொடர்ந்து வழக்கம் போல் நுழைவாயில் பகுதியில் போலீசார் மனுதாரர்களை சோதனைக்கு உட்படுத்தி உள்ளே அனுப்பி வைத்தனர்.இருந்த போதிலும் போலீசின் கண்ணில் சிக்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் சென்றனர். பின்னர் கலெக்டர் கார் நிறுத்தப்படும் பகுதியில் நின்று கொண்டு திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் 3 பேரையும் மீட்டு விசாரித்தனர். விசாரணையில் தீக்குளிக்க முயன்றவர்கள் திருச்சி முசிறி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மனைவி பாப்பாத்தி (வயது 65)அவரது மகள் மாலதி( 40 )பேத்தி ஹரிப்பிரியா( 8 )என்பது தெரியவந்தது.இவர்களுக்கு சொந்தமான வீட்டை உறவினர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.இதற்கு நீதி கேட்டு வருவாய்த்துறை அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் எந்த தீர்வும் காணப்படவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி அவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது

    Next Story
    ×