search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு - திருச்சி மலைக்கோட்டையில், நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது
    X

    கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு - திருச்சி மலைக்கோட்டையில், நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது

    • கார்த்திகை தீபத்திருநாளில் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் வருடம் தோறும் மகா தீபம் ஏற்றுவது வழக்கம்.
    • நாளை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார் கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    திருச்ச

    கார்த்திகை தீபத்திருநாளில் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் வருடம் தோறும் மகா தீபம் ஏற்றுவது வழக்கம். நாளை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார் கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    இதற்காக ஏற்கனவே தீபத்திரியை தயாரிக்கும் பணிகளில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 300 மீட்டர் நீளமுள்ள திரிகள் தயாரிக்கப்பட்டன. துணி நூல்கள் வைக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அதனை உருண்டையாக வடிவமைத்து அதனை கட்டி ஒவ்வொன்றாக அடுக்கி பெரிய துணிகள் வைத்து அதைக் கட்டினர்.

    பின்னர் உச்சி பிள்ளையார் கோவிலின் மேல் அமைக்கப்பட்டுள்ள தீபம் ஏற்றும் இடத்தில் அதை வைத்தனர். தீபம் ஏற்றுவதற்கான கொப்பறையில் சுமார் 700 லிட்டர் இலுப்ப எண்ணெய், நல்லெண்ணெய், நெய் உள்ளிட்ட பல்வேறு வகையான எண்ணெய்கள் ஊற்றப்பட்டன. சுமார் ஒரு வாரத்திற்கு மேலாக இந்த எண்ணெயில் அந்த திரிகளை ஊற வைக்கப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து நாளை மாலை 6 மணி அளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. தமிழகத்தில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பின்னர் இங்கு தீபம் ஏற்றப்படும். இதற்கான பணிகளை கோவில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×