search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுப்புத்தூரில் தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு போட்டிகள் - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
    X

    காட்டுப்புத்தூரில் தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு போட்டிகள் - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    • தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் நடை பெற்ற விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • காட்டுப்புத்தூர் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் டெபில், பெஞ்சுகள் வழங்கப்பட்டது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி (மேற்கு) நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் பள்ளிமாணவ-மாணவிகளுக்கு காட்டுப்புத்தூர் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பெற்ற விழிப்புணர்வு பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி ஓவியப்போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவிற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் சங்கீதாசுரேஷ் தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் சுதாசிவசிவராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் நீதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல்அமீது வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ந.தியாகராஜன் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.மேலும் ரூபாய் 5 லட்சம் செலவில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து டெபில் பெஞ்சுகளை வழங்கினார்.

    இதில் தொட்டியம் பேரூராட்சித் தலைவர் சரண்யாபிரபு, தொட்டியம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால.ந திருஞானம் காட்டுப்புத்தூர் நகர செயலாளர் கே.எஸ்.டி. செல்வராஜ் தொட்டியம் நகர கழக செயலாளர் விஜய் ஆனந்த் மற்றும் திமுக நிர்வாகிகள் பேரூராட்சி பணியாளர்கள் பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×