search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி மெயின் ரோட்டில் வாகனங்களை மறிக்கும் கால்நடைகள் -  இரவில் அச்சத்துடன் கடக்கும் மக்கள்
    X

    திருச்சி மெயின் ரோட்டில் வாகனங்களை மறிக்கும் கால்நடைகள் - இரவில் அச்சத்துடன் கடக்கும் மக்கள்

    • திருச்சி தீரன் நகரில் தினமும் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை.
    • மாணவ-மாணவிகள், முதியவர்கள் மாடுகளுக்கு பயந்து வேறு வழியே சுற்றி செல்லும் பரிதாப நிலை உள்ளது.

    திருச்சி

    திருச்சி-திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள வளர்ந்து வரும் பகுதி தீரன் நகர். அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, வாரச்சந்தை என எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதியில் மெயின் ரோட்டில் பொழுது சாய்ந்ததும் வெளியில் மேய்ந்து வரும் மாடுகள் ரோட்டுக்கு வந்து விடுகின்றன.

    இங்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. பாதசாரிகளும் மாடுகளுக்கு பயந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த பகுதிகளில் ஏராளமான கடைகளும் உள்ளன.

    கடைகளுக்கு வருபவர்களும், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வார சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி போன்ற பொருட்களை வாங்கிச் செல்ல முடியவில்லை. மாணவ-மாணவிகள், முதியவர்கள் மாடுகளுக்கு பயந்து வேறு வழியே சுற்றி செல்லும் பரிதாப நிலை உள்ளது.

    மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் வெளியே சுற்றி திரிந்தால் அவற்றை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அதனை யாரும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. இங்கு அபராதம் விதிக்கப்படாவிட்டாலும் மாட்டின் உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு விதிமுறைகளை எடுத்துக் கூறி மாடுகளை வீடுகள் அருகிலேயே கட்டி அல்லது தொழுவத்தில் கட்டி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மாடுகள் முட்டி பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக இந்த நடவடிக்கையை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×