என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கல்லூரி மாணவி மாயம்
திருச்சி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கீழப்பட்டி மான்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் பிரபாவதி (வயது 18). இவர் திருச்சி ஈ.வி.ஆர் கல்லூரியில் பி.எஸ்.சி தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12-ந் தேதி கல்லூரிக்கு ஹால்டிக்கெட் வாங்க சென்ற பிரபாவதி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. உடனே இதுகுறித்து மாரிமுத்து கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிந்து மாயமான மாணவி பிரபாவதியை தேடி வருகிறார்.
Next Story
×
X