search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் திறந்தவெளி பயிற்சி மையமாக மாறிய மாநகராட்சி பூங்கா
    X

    திருச்சியில் திறந்தவெளி பயிற்சி மையமாக மாறிய மாநகராட்சி பூங்கா

    • திருச்சியில் திறந்தவெளி பயிற்சி மையமாக மாநகராட்சி பூங்கா மாறியது
    • மாணவர்கள் நலனுக்காக இரவு 8 மணி வரை திறக்கப்படுகிறது

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி பிர–தான அலுவலகம் முன்பு பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்தப்பூங்கா கடந்த ஆண்டு வரை மதிய உணவு சாப்பிடும் நபர்களுக்கு மட்டுமே அடைக்கலம் தந்தது. சுற்றிலும் உயர்ந்த காம்பவுண்டு சுவர்கள், புதர்மண்டி கிடந்த செடி, கொடிகளால் வெளி நபர்கள் யாரும் அதிகம் உள்ளே செல்வதில்லை. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் மாநக–ராட்சி நிர்வாகம் ரூ.30 லட்சம் செலவில் அந்தப் பூங்காவை அழகுபடுத்தியது. பூங்காவின் நான்கு திசை–களில் இருந்து யார் பார்த்தாலும் பூங்காவுக்குள் இருக்கும் நபர்களை பார்க்க இயலும்.

    அந்த அளவுக்கு காம்பவுண்டு சுவர்கள் மாற்றி அமைக்கப்பட்டன. பளிங்கு கற்களால் புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டது. நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு வாக்கிங் டிராக் புதிதாக போடப்பட்டது. இதனால் இப்போது வெகுஜன மக்கள் இந்த பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர். காலை மற்றும் மாலையில் சிலர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.இந்த நிலையில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை பூங்கா பெரிதும் கவர்ந்துள்ளது. சமீபகாலமாக அவர்களின் திறந்தவெளி பயிற்சி மைய–மாக இந்த பூங்கா மாறி உள்ளது.

    அந்த பகுதியில் உள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் பயி–லும் மாணவ-மாணவி–கள் குரூப்பாக உட்கார்ந்து கல்வி பயில்கிறார்கள். மாணவர்கள் ஒருவருக் கொருவர் கலந்துரையாடி வட்டமாக உட்கார்ந்து குறிப்பு எடுத்துக் கொள்கி–றார்கள். யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., வங்கி தேர்வுகளுக்கு படித்து வரும் மாணவர்கள் தினமும் இந்த பூங்காவில் உட்கார்ந்து படிக்கிறார்கள். இது பற்றி மாணவர்கள் கூறும்போது, மரங்களின் நிழலில் காற்றோட்டமாக விசாலமாக அமர்ந்து கல்வி பயில ஏதுவாக பூங்கா இருப்பதால் இங்கு வருகிறோம். சில நேரங்க–ளில் மதிய உணவும் இங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு மாலை வரை படிக்கின்றோம்.

    குரூப் ஸ்டடிக்கு தகுந்த இடமாக உள்ளது என்றனர். இது தொடர்பாக மாநக–ராட்சி மேயர் மு.அன்பழகன் கூறும்போது, பூங்காவில் மாணவர்கள் கல்வி பயில்வது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களின் வச–திக்காக கூடுதல் நேரம் திறக்க பணியாளர்களை அறிவுறுத்தி உள்ளேன். காலையிலும் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு வசதியாக காலை ஆறு மணிக்கு 6 திறக்கப்படுவதோடு, இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்றார். காம்பவுண்ட் சுவர்க–ளின் உயரம் குறைக்கப் பட்டு புதர்கள் அகற்றப் பட்டதால் காதல் ஜோடிக–ளின் அட்டகாசம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுவே அனைத்து தரப்பினரை–யும் அந்த பூங்கா–வுக்கு ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×