search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் இருந்து மும்பைக்கு நேரடி விமான சேவை
    X

    திருச்சியில் இருந்து மும்பைக்கு நேரடி விமான சேவை

    • திருச்சியில் இருந்து மும்பைக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது
    • அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் இயக்கப்படும் என அறிவிப்பு

    கே.கே.நகர்,

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி, பகரின் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களை மலிந்தோ ஏர் ஏசியா ஸ்கூல், இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கி வருகின்றன.இதே போன்று திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக ஹைதராபாத், சென்னை, புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது.திருச்சியில் இருந்து நாள்தோறும் 7 உள்நாட்டு சேவைகள், 11 வெளி நாட்டு விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் வியட்நாமிற்கு புதிய விமான சேவையை வியட் ஜெட் நிறுவனம் தொடங்க உள்ளது.அதேபோன்று 4-ந் தேதி முதல் திருச்சியில் இருந்து மும்பைக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட உள்ளது. இந்த விமானம் மும்பையில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.55 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும்.மறு மார்க்கத்தில் இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மும்பை சென்றடையும் என இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×