search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரிகளை உயர்த்தி மக்களை தி.மு.க. அரசு வதைக்கிறது -  தமிழ் மகன் உசேன் பேட்டி
    X

    வரிகளை உயர்த்தி மக்களை தி.மு.க. அரசு வதைக்கிறது - தமிழ் மகன் உசேன் பேட்டி

    • வரிகளை உயர்த்தி மக்களை தி.மு.க. அரசு வதைக்கிறது என்று தமிழ் மகன் உசேன் தெரிவித்தார்.
    • எடப்பாடி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி

    திருச்சி:

    திருச்சி மாநகர் மாவட்ட அ தி.மு.க. காந்தி மார்க்கெட் பகுதி கழகம் சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவரும், முன்னாள் வக்பு வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திட திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில், அவுலியாக்கள் மூலம் சிறப்பு பிரார்த்தனை எனும் துவா மேற்கொள்ளப்பட்டது.

    இதில், முன்னாள் எம்.பி.யும், அதிமுக அமைப்பு செயலாளருமான டி. ரத்தினவேல், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் சீனிவாசன், மாவட்ட மாணவரணி செயலாளரும், ஆவின் தலைவருமான கார்த்திகேயன், சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான்,மாவட்ட அவைத் தலைவர் மலைக்கோட்டை அய்யப்பன், துணைச்செயலாளர் வனிதா, மீனவரணி மாவட்ட செயலாளர் தென்னூர் அப்பாஸ், பாசறை மாவட்ட செயலாளர் இலியாஸ், தொழிற்சங்கம் ராஜேந்திரன், பாலக்கரை சதர், மல்லிகா செல்வராஜ், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குப்தா, அன்பழகன், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, மற்றும் எம்ஜிஆர் மன்றம் அப்பாக்குட்டி, இன்ஜினியர் சிராஜுதீன், நத்தர்ஷா, தற்காகாஜா, பொன். அகிலாண்டம், காசிப்பாளையம் சுரேஷ், கட்பீஸ் ரமேஷ், கன்னியப்பன், ஐ.டி.விங்க் பாபு. அஸ்ரப் ஜான். கேபிள் முஸ்தபா, ஜெயக்குமார், வி.எல்.சீனிவாசன், வண்ணாரப்பேட்டை ராஜன், ராஜசேகர், மாணவரணி குமார்,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    பின்னர் தமிழ் மகன் உசேன் நிருபர்களிடம் கூறும்போது,

    எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக என்னுடைய ஆன்மீகப் பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    33 வது மாவட்டமாக திருச்சி மாநகர மாவட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை எனும் துவா மேற்கொள்ளப்பட்டது.

    சிறுபான்மையின மக்களுக்கு அரணாக இருந்து எவ்வளவோ நல்ல பல திட்டங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தந்திருக்கிறார்கள். அவர்களின் வழியில் எடப்பாடி கே. பழனிச்சாமியும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.

    மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்களை தி.மு.க. அரசு வாட்டி வதைக்கிறது. இந்த விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். எப்போது தேர்தல் வரும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் அருளால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என்று நம்புகிறோம். அப்படி சட்டப்பேரவை தேர்தல் வந்தால் தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி இருக்கிறார்கள். அடுத்து வரும் தேர்தலில் சிறுபான்மையினர் சமுதாயம் யாருக்கு ஆதரவை தருகிறார்கள் என்பதை நீங்களே பார்ப்பீர்கள். என்றார்.

    Next Story
    ×