search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
    X

    மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

    • மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி நாளை தொடங்குகிறது என்று திருச்சி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்
    • பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொள்ளலாம்

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3,552 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இந்த பணியிடங்களுக்கு குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இணையவழியில் (https://www.tnusrb.tn.gov.in/) வருகிற 15.8.2022 வரை விண்ணப்பிக்கலாம். இந்த போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நாளை (29-ந்தேதி) தொடங்கப்பட உள்ளது.

    இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் தொலைதூரத்தில் வசிக்கும் இளைஞர்களுக்காகவே 20.3.2022 அன்று தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு தேர்வு முகமையால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு கல்வி தொலைக்காட்சியின் மூலமாக பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்துள்ளார்.

    இந்த பயிற்சி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், அதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பாகும்.

    தொலை தூரத்தில் வசிக்கும் இளைஞர்கள் இதனை பார்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×