என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சட்ட விரோதமாக வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்
Byமாலை மலர்29 Oct 2023 3:07 PM IST
- இவரது வீட்டில் பட்டாசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி அலுவலகத்திற்கு புகார் சென்றது
- புகாரின் பேரில் துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (45). இவரது வீட்டில் பட்டாசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி அலுவலகத்திற்கு புகார் சென்றது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி தனி படையினர் ராஜாவின் வீட்டை நேற்று இரவு அதிரடியாக சோதனையிட்டனர். சோதனையில் அரசின் உரிய அனுமதி இன்றி சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள பட்டாசு பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து பட்டாசை பறிமுதல் செய்த எஸ்.பி தனிப்படையினர், துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்தனர். புகாரின் பேரில் துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் நகரத்தில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பட்டாசு பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
X