search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும்-மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி அறிக்கை
    X

    மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும்-மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி அறிக்கை

    • மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும் என மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி அறிக்கை விடுத்துள்ளார்
    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டா–லின் தன்னுடைய 70-வது பிறந்த நாளான நாளை சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலை–ஞர் அரங்கில் தி.மு.கழகத்தினர் அனைவரின் வாழ்த்து–களை ஏற்றுக் கொள்கிறார்.

    திருச்சி:

    திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலா–ளர் க.வைர–மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப–தாவது:-தி.மு.க. தலைவரும், திராவிட மாடல் ஆட்சி நடத்தி இந்தியாவிற்கே வழி–காட்டியாக திகழும் திராவிட நாயகனும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டா–லின் தன்னுடைய 70-வது பிறந்த நாளான மார்ச் 1-ந்தேதி புதன்கிழமை அன்று சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலை–ஞர் அரங்கில் தி.மு.கழகத்தினர் அனைவரின் வாழ்த்து–களை ஏற்றுக் கொள்கிறார்.

    அன்று மாலை அகில இந்திய அளவிலான அனைத் துக்கட்சி தலைவர் கள் கலந்து கொள்ளும் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடை–பெறவிருக்கின்றது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக, நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநி–திகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள், சட்ட மன்ற உறுப்பினர்கள்,

    மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல் வீரர்கள் உள்ளிட்ட அனை–வரும் பெருந் தி–ரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.மேலும், தலைவரின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நமது மாவட்டம் முழுவதும் மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழகத்தின் சார்பில் கழக கொடி கம்பங்களை புதுப் பித்தும் இருவண்ண கொடியேற்றியும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மார்ச் மாதம் முழுவதும் சிறப்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து எழுச்சியுடன் தலை–வர் அவர்களின் பிறந்த நாள் விழாவினை கொண் டாட வேண்டுமென கேட் டுக்கொள்கின்றோம்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


    Next Story
    ×