என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு முசிறியில் டி.எஸ்.பி தலைமையில் கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்
Byமாலை மலர்1 Jan 2023 3:16 PM IST
- புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு முசிறியில் டி.எஸ்.பி தலைமையில் போலீசார் கேக் வெட்டி கொண்டாடினர்
- புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்றிரவு முசிறி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
முசிறி:
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்றிரவு முசிறி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். போலீசாரின் ரோந்து பணியினை டிஎஸ்பி யாஸ்மின் ஆய்வு செய்து கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியானதை தொடர்ந்து முசிறி கைக்காட்டி பகுதியில் டிஎஸ்பி யாஸ்மின் கேக் வெட்டினார். பின்னர் கேக் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. போலீஸ் இன்ஸ் பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சக்தி விநாயகம், வடிவேல், நெடுஞ்சாலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அங்கமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கோமதி பிரியா பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X