search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநங்கைகள் சொந்த தொழில் தொடங்க மானியம் -   கலெக்டர் தகவல்
    X

    திருநங்கைகள் சொந்த தொழில் தொடங்க மானியம் - கலெக்டர் தகவல்

    • சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் திருநங்கையர்கள் சொந்த தொழில் துவங்கிட 2022-2023ஆம் நிதியாண்டில் ரூ. 50,000- வரை மானியமாக வழங்கப்படவுள்ளது
    • கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் ஆகியோர்கள் அலுவலர் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட உள்ளது.

    திருச்சி,

    திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :

    சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் திருநங்கையர்கள் சொந்த தொழில் துவங்கிட 2022-2023ஆம் நிதியாண்டில் ரூ. 50,000- வரை மானியமாக வழங்கப்படவுள்ளது, விருப்பமுள்ள திருநங்கைகள் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

    சொந்த தொழில் துவங்க விருப்பமுள்ள திருநங்கைகள் தாங்கள் துவங்க உள்ள தொழில் தொடர்பான கருத்துரு மற்றும் உரிய விலைப்புள்ளிகளுடன் திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு 25.11.2022-க்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்,

    மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413796 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். மாவட்ட சமூகநல அலுவலர்,மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சி என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

    ஆதரவற்ற பெண்கள்

    இதைப் போல் தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள், உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி,

    சுகாதாரம், வேலை வாய்ப்பு, சிறப்பு சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

    மேற்காணும் வாரியத்திற்கு கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் ஆகியோர்கள் அலுவலர் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளதால்,

    தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் 14.11.2022 க்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்குமாறும், மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண் : 0431-2413796 என்ற எண்ணை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,

    Next Story
    ×