search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் ஒரு வழிப்பாதையில் திறக்கப்பட்டுள்ள மதுபான கடையை மூட வேண்டும்-கலெக்டரிடம் பாஜக வக்கீல் அணி மனு
    X

    திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் ஒரு வழிப்பாதையில் திறக்கப்பட்டுள்ள மதுபான கடையை மூட வேண்டும்-கலெக்டரிடம் பாஜக வக்கீல் அணி மனு

    • மதுபான கடையை மூட வேண்டும் என கலெக்டரிடம் பாஜக வக்கீல் அணியினர் மனு கொடுத்தனர்
    • மது குடிக்க செல்பவர்கள் டி.வி.எஸ். டோல்கேட் ஒரு வழிப்பாதையில் திரும்பி வருவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    திருச்சி:

    பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சென்னை செல்லும் பைபாஸ், சர்வீஸ் ரோட்டில் நடத்தப்பட்டு வந்த டாஸ்மாக் கடையானது, நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் மூடப்பட்டது. தற்போது டி.வி.எஸ். டோல்கேட் ஒரு வழி பாதையில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மது குடிக்க செல்பவர்கள் அதே வழியில் திரும்பி வருவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அது மட்டுமல்லாமல் அந்த கடைக்கும் டி.வி.எஸ்.டோல்கேட் பஸ் ஸ்டாப்பிற்கும் 200 மீட்டர் அளவே தூரம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தத்தில் அந்தப் பகுதியில் உள்ள மூன்று கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பஸ்களில் ஏறி இறங்குகின்றனர். மேலும் அந்த கடைக்கு பக்கத்தில் பக்தர்கள் வழிபடும் சங்கிலியாண்டவர் முத்து மாரியம்மன் கோவில் ஐயப்ப சேவா சங்கம் இருக்கிறது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் நடந்துகொள்ளவில்லை.

    ஆகவே பொது மக்கள், கல்லூரி மாணவர்கள், பயணிகள், வியாபாரிகள், குடியிருப்புவாசிகள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலையி டி.வி.எஸ். டோல்கேட், தஞ்சாவூர் வழி பஸ் நிறுத்தத்திற்கு அருகாமையில் ஒருவழி சாலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை முற்றிலுமாக அகற்றி விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.






    Next Story
    ×