என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்தம் - போக்குவரத்து ஊழியர்கள் அறிவிப்பு
- 14-வது ஊதிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
- 80 மாத காலமாக பஞ்சப்படி வழங்கப்படாமல் உள்ளது.
தாராபுரம் :
போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்த போராட்ட விளக்க வாயிற்கூட்டம் தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்றது. கூட்டத்துக்கு தாராபுரம் மண்டல துணைத்தலைவர் டி.ராமசாமி தலைமை தாங்கி பேசுகையில்,14-வது ஊதிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
போக்குவரத்து கழகத்தின் வரவு-செலவு பற்றாக்குறையை அரசே ஏற்று பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். ஓய்வுபெறும் தொழிலாளியை வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்பும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஓய்வுபெற்ற தொழிலாளிக்கு பணப்பலன்களை உடனே வழங்கவேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 80 மாத காலமாக பஞ்சப்படி வழங்கப்படாமல் உள்ளது. அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் ஆகஸ்டு 3-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.