search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்து செல்ல லாரிகளை   அனுமதிக்க விவசாயிகள் கோரிக்கை
    X

    ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்து செல்ல லாரிகளை அனுமதிக்க விவசாயிகள் கோரிக்கை

    • ஏரிகள், குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்த முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்.
    • வண்டல் மண் எடுக்க லாரிகளை பயன்படுத்த அனுமதிக்கவேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் அரங்க சங்கரய்யா, செயலாளர் கோவிந்தன், மாவட்ட தலைவர் சரவணன், வெற்றிமணி மற்றும் நிர்வாகிகள் சேலம் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஏரிகள், குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்த முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் வண்டல் மண் எடுக்க டிராக்டர் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற நிபந்தனை சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

    டிராக்டர் இருப்பவர்களி–டம் டிராக்டர் வைத்திருப்பவர்களிடம் மண் கொண்டு செல்லும் ட்ரெய்லர் பெட்டி இல்லை. வாடகை கட்டுபடியாகவில்லை என்ற காரணம் கூறி வாடகைக்கு வர மறுக்கிறார்கள். தற்போது மழை பெய்துள்ளதால் வண்டல் மண் எடுக்க வாடகை டிராக்டர் கிடைப்பதில்லை.

    குறிப்பிட்ட காலத்துக்குள் மண் எடுத்து பயன்படுத்த வேண்டும் என்பதால் தற்போது உள்ள டிராக்டர் வாகனங்கள் போதுமானதாக இல்லை. அதனால் மண் எடுக்கும் பணிகள் தாமதம் ஆகிறது.

    ஒரு டிராக்டர் வாடகை ஒரு லோடுக்கு ஒரு யூனிட் மட்டுமே சேர்த்து ரூ.1500. 4 டிராக்டர் லோடு கொள்ளும் லாரிக்கு வாடகை 4 யூனிட்டுக்கும் சேர்த்து ரூ.4500 மட்டுமே. லாரியை பயன்படுத்தினால் விவசாயிகளுக்கு ரூ.1500 முதல் ரூ.2000 வரை மிச்சமாகிறது.

    மேலும் டிராக்டர் மூலமாக நெடுஞ்சாலைகளில் மண் கொண்டு செல்லும்போது சாலைகளில் கொட்டுகிறது. இதனால் நடைபாதை சாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே வண்டல் மண் எடுக்க லாரிகளை பயன்படுத்த அனுமதிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×