என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் மஞ்சக்குப்பம் பஸ் நிறுத்தத்தை ஆக்கிரமித்த இரு சக்கர வாகனங்கள்
- முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிறுத்தமாக கடலூர் மஞ்சக்குப்பம் போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தம் இயங்கி வருகின்றது.
- பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் உள்ளே சென்று வராததால் இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்திற்குள் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்வது போல் மிக முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிறுத்தமாக கடலூர் மஞ்சக்குப்பம் போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தம் இயங்கி வருகின்றது. இந்த பகுதியில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் கலெக்டர் முகாம் அலுவலகம், பல்வேறு துறை அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள், வணிக வளாகங்கள், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றது.
இதன் காரணமாக தின ந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவ மாணவிகள் என தினந்தோறும் மஞ்சக்குப்பம் போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக கடலூருக்குள் வரக்கூடிய அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் மஞ்சக்குப்பம் போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில் சிறிது நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்றி சென்று வருகின்றனர்.
இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் விழா காலங்களில் மக்கள் திரள்வது போல் கூட்டமும் மற்றும் சாதாரண நேரங்களில் மக்கள் நின்று கொண்டு பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக மஞ்சகுப்பம் போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் பெரிய அளவிலான பஸ் நிறுத்த ஷெட் அமைக்கப்பட்டு அனைத்து பஸ்களும் உள்ளே வந்து நின்று பயணிகளை ஏற்றி பாதுகாப்பாக வெளியில் செல்வதற்காக அமைத்தனர். மேலும் இப்பகுதியில் சாலையில் அனைத்து பஸ்களும் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருவதால் பெரிய அளவிலான பஸ் நிறுத்த ஷெட் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தினந் தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் சென்றுவரும் நிலையில் வழக்கம் போல் சாலையில் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றனர். மேலும் பஸ் டிரைவர்கள் தங்கள் பஸ்களில் அதிக அளவில் பயணிகள் ஏற்றுவதற்காக நடுச் சாலையிலே பஸ்களை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக பயணிகளை ஏற்றுவதும், அவர்களுக்குள் அடிக்கடி பயணிகள் ஏற்றுவதில் தகராறு ஏற்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
தற்போது பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் உள்ளே சென்று வராததால் இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. மேலும் கால்நடைகள் உள்ளே அமர்ந்து பாதுகாப்பாக இருந்து வருகின்றது. இதன் காரணமாக எதற்காக பல லட்சம் செலவு செய்து இந்த பஸ் நிறுத்த ஷெட் அமைக்கப்பட்டது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் கடலூர் பெரு நகராட்சி மாநகராட்சியாக மாறிய பின்பு பெயர் மட்டுமே மாறி உள்ளது. அடிப்படை பணிகளான இது போன்ற பணிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி அனைத்து பஸ்களும் பஸ் நிறுத்தத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்