என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடைகளை ராஜா எம்.எல்.ஏ. வழங்கியபோது எடுத்த படம்.
சங்கரன்கோவிலில் கோடை காலத்தை முன்னிட்டு சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடைகள்
- சங்கரன்கோவிலில் சாலை வியாபாரிகள் கோடை வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் நிழற்குடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் முதல்-அமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு சாலை வியாபாரிகள் கோடை வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் நிழற்குடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சாலை ஓரங்களில் வியாபாரம் செய்து வரும் வியாபாரி களுக்கு நிழற்குடைகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, மதிமாரிமுத்து, நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர அவைத் தலைவர் முப்பிடாதி, இளைஞர் அணி சரவணன், நகர துணை செயலாளர்கள் கே.எஸ். எஸ். மாரியப்பன்,
முத்துக்குமார், வார்டு செயலாளர்கள் காளிசாமி, கோமதிநாயகம், வக்கீல் ஜெயகுமார், முருகன், வெங்கடேஷ், காவல் கிளி, வக்கீல் சதீஷ், ஜெயக்குமார், பிரகாஷ், சிவாஜி, சிவா, ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






