என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் தூக்கில் தொங்கிய அடையாளம் தெரியாத ஆண் பிணம்
- வனப்பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
- வனப்பகுதியில் பிணமாக இருந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.
கோவை:
கோவை ஆலாந்துறையை அடுத்த இருட்டுப்பள்ளம் போளுவாம்பட்டி ரேஞ்சராக வேலை செய்து வருபவர் ராமநாதன் (58). இவருக்கு வனப்பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் அதிகாரிகளுடன் வனப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு 45 வயது மதிக்கதக்க ஆண் பிணம் மரத்தில் தொங்கியவாறு இருந்தது.
இதையடுத்து அவர் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணமாக தொங்கிய ஆணின் உடலை மீட்டு சோதனை செய்தனர்.
அதில் அவர் இறந்து 2, 3 நாட்கள் இருக்கலாம் என தெரியவந்தது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரேஞ்சர் ராமநாதன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் வனப்பகுதியில் பிணமாக இருந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் அங்கு வந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோனங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனப்பகுதியில் ஆண் பிணம் மரத்தில் தூக்குப்போட்டு தொங்கியவாறு இருந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.