என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் வ.உசி. சிலை அமைக்கும் பணி-அரசு செயலாளர் ஆய்வு
- வ.உ.சி.க்கு திருவுருவச்சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
- சிலை தயாரிக்கும் பணி சென்னையில் நடைபெற்று வருகிறது
கோவை,
கப்பலோட்டிய தமிழன் என அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் நாட்டுக்கும், மக்களுக்கும் ஆற்றிய சேவைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக வ.உ.சி.க்கு திருவுருவச்சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து கோவை வ.உ.சி மைதானத்தில் அவருக்கு சிலை அமைக்க 50 அடி நீளம், 45 அடி அகலம் கொண்ட 5 சென்ட் இடம் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.
இங்கு பொதுப்பணித்துறை சார்பில் வ.உ.சி.க்கு சிலை நிறுவிட பீடம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ரா.செல்வராஜ், கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை வ.உ.சி மைதானத்தில் ரூ.40 லட்சத்தில் பீடம் அமைத்து அதில் வ.உ. சிதம்பரனாருக்கு 7 அடி உயரத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட உள்ளது.
இதற்கான சிலை தயாரிக்கும் பணி சென்னையில் நடைபெற்று வருகிறது. மைதானத்தில் பீடம் அமைக்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி அடுத்த மாதத்துக்குள் நிறைவுறும். அதன் பிறகு வ.உ.சி சிலை நிறுவப்படும். சிலை அருகே அவரின் வரலாற்று தகவலும் இடம் பெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.