search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெண்ணாற்றங்கரை நீலமேகப்பெருமாள் கோவிலில் வைகாசி பிரமோற்சவம் 25-ந்தேதி தொடக்கம்
    X

    வெண்ணாற்றங்கரை நீலமேகப்பெருமாள் கோவிலில் வைகாசி பிரமோற்சவம் 25-ந்தேதி தொடக்கம்

    • வருகிற 25-ந்தேதி காலை 8 மணிக்கு வைகாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • வருகிற 31-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வெண்ணாற்ற ங்கரை அருகில் நீலமேகப்பெ ருமாள், மணிக்குன்றப் பெருமாள், வீரநரசிம்மர் என மூன்று வடிவங்களில் பெருமாள் தனித்தனி கோவில்களில் அருள்பாலி க்கிறார். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மூன்று கோவில்களையும் சேர்த்து மங்களாசாசனம் செய்ததால் மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது. இவை தஞ்சை மாமணிகோவில் என அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் மூலவரான

    நீலமேகப்பெருமாள் அமர்ந்த திருகோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

    இறைவி செங்கமலவல்லி. இந்த பெருமாளுக்கு தைல காப்பு சாற்றி வழிபாடு நடக்கிறது.

    இக்கோவிலில் உற்சவர்க ளுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி பிரமோற்சவம் 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி பிரமோற்சவம் வருகின்ற 25-ம்தேதி (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 2-ம்தேதி வரை நடக்கிறது.

    மேற்கண்ட தினங்களில் காலை உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், மாலை 6 மணிக்கு உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி புறப்பாடு கோவில் உட்பிரகாரத்தில் நடக்கிறது.

    தொடக்க நாளான 25-ம்தேதி காலை 8 மணிக்கு தஞ்சாவூர் வெண்ணா ற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம் கொடியே ற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வாக 25-ம் தேதி அன்னப்பட்சி வாகனமும், 28-ம்தேதி கருடசேவை, 29-ம்தேதி சேஷ வாகனம், 30-ம்தேதி யானை வாகனம் , 31-ம்தேதி திருக்கல்யாணம், ஜூன்1-ம்தேதி குதிரை வாகனம், 2-ம்தேதி காலையில் திருத்தேர் தொடர்ந்து தீர்த்தவாரி நடக்கிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா , கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×