search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் வைகாசி விசாக விழா
    X

    சுவாமி- அம்பாள் வெள்ளி பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.

    திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் வைகாசி விசாக விழா

    • வருகிற 31-ந்தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.
    • 2-ந்தேதி தீர்த்தவாரியும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா காட்சியும் நடைபெற உள்ளது.

    மெலட்டூர்:

    பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் முல்லைவ னநாதர் உடனுறை கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி- அம்பாள் காலை, இரவு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்.

    முதல் நாளில் கொடியேற்றம் நடைபெற்று, இரவு வக்கீல் அரிய அரசபூபதியின் ஆன்மீக சொற்பொழிவும், அதனைத் தொடர்ந்து சுவாமி- அம்பாள் வெள்ளி பல்லக்கில் வீதிஉலா காட்சியும் நடைபெற்றது.

    2-வது நாள் காலை வெள்ளி பல்லக்கிலும், இரவு சூரிய பிரபையில் சுவாமி- அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

    இன்று (26-ந்தேதி) காலை வெள்ளி பல்லக்கிலும், இரவு பூத வாகனத்தில் சுவாமி- அம்பாள் வீதியுலாவும், தொடர்ந்து சிவசக்தி கலைக்கூட மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    நாளை (27-ந்தேதி) சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 28-ந்தேதி ஓலை சப்பரத்தில் சுவாமி வீதியுலாவும், 31-ந்தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது.

    வருகிற ஜூன் (1-ந்தேதி) தேரோட்டமும், 2-ந்தேதி தீர்த்தவாரியும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா காட்சியும் நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி மேற்பார்வை யில் கோவில் பணியாளர்கள், கிராமமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×