search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை கொங்கணேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
    X

    சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கொங்கணேஸ்வரர், ஞானாம்பிகை, கொங்கண சித்தர்.

    தஞ்சை கொங்கணேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    • 365 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
    • வருகிற 30-ந்தேதி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள கொங்கணேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவரை கொங்கண சித்தர் பிரதிஷ்டை செய்தார் என்கிறது தலபுராணம். இங்கு கொங்கண சித்தருக்கு என தனி சன்னதி உள்ளது.

    அதன் அருகில் சப்தரிஷிகளும் உள்ளனர். இங்கு 11 அடுக்கு தீபமேடையில் 365 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பிரார்த்தனை களையும் நிறைவேறும் என்பது ஐதீகம். தலவிருட்சமாக மகிழ மரம் இருப்பது தனிச்சிறப்பு.

    இக்கோவிலில் பல்லாண்டுகளாக வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பாக கொண்டாட ப்படுகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இன்று காலை 9 மணிக்கு வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக நேற்று மாலை பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. இவ்விழா வருகின்ற ஜுன் 3-ம்தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலை 10 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகமும் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் 7 மணிக்கு சிறப்பு அலங்காரமும் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.

    முக்கிய நிகழ்வாக நாளை சூரிய பிரபை, 26-ம்தேதி சந்திரபிரபை, 27-ம்தேதி பூத வாகனம், 28-ம்தேதி திருக்கல்யாணம், 29-ம்தேதி யானை வாகனம், 30-ம்தேதி ரிஷப வாகனம் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, 31-ம் தேதி கைலாச வாகனம்,
    ஜுன்1-ம்தேதி காலை திருத்தேர் , 2-ம்தேதி காலை தீர்த்தவாரி மாலை குதிரை வாகனம், 3-ம்தேதி விடையாற்றி நடக்கிறது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா , கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×