search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூர் பஸ்நிலையம் சீரமைப்பு: பயணிகளுக்கு காத்திருப்பு கூடாரம் அமைக்க வேண்டும்-இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை
    X

    வள்ளியூர் பேரூராட்சி துணைத் தலைவரிடம் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு கொடுத்த போது எடுத்த படம்.

    வள்ளியூர் பஸ்நிலையம் சீரமைப்பு: பயணிகளுக்கு காத்திருப்பு கூடாரம் அமைக்க வேண்டும்-இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

    • வள்ளியூர் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பஸ்நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக சீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
    • திருச்செந்தூர் செல்லும் பேருந்தை பழைய பேருந்துநிலையம் பகுதியில் நிறுத்தாமல் புதிய பேருந்து நிலையம் வரையில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

    வள்ளியூர்:

    வள்ளியூர் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பஸ்நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக சீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதற்காக பஸ் நிலையம் மூடப்பட்டு அனைத்து பேருந்துகளும் பஸ்நிலையத்திற்கு வெளியே சாலையோரம் நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சாலையோரம் வெயிலிலும் மழையிலும் நனைந்தபடி பாதுகாப்பின்றி காத்திருக்கின்றனர்.

    இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வள்ளியூர் நகர செயலாளர் கலைமுருகன், ராதாபுரம் வட்டாரச் செயலாளர் சேதுராமலிங்கம், மணியன் ஆகியோர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    வள்ளியூர் பஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்டும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பயணிகள் காத்திருப்பதற்கு மழை, வெயிலில் பயணிகளை பாதிக்காதவாறு பெரிய அளவில் மேற்கூரையுடன் கூடிய காத்திருப்பு கூடாரம் அமைக்கவேண்டும். மேலும் பஸ்நிலைய கட்டுமானபணி குறித்த திட்டமதிப்பீடு, வேலையின் கால நிர்ணயம், ஒப்பந்தகாரர் விபரம் உள்ளிட்ட அறிவிப்பு கள் அடங்கிய பலகை அமைக்கவேண்டும். இது தவிர திருச்செந்தூர் செல்லும் பேருந்தை பழைய பேருந்துநிலையம் பகுதியில் நிறுத்தாமல் புதிய பேருந்து நிலையம் வரையில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×