என் மலர்
உள்ளூர் செய்திகள்
வள்ளியூர் முருகன் கோவில் சித்திரை திருவிழா நாளை தொடங்குகிறது
- வள்ளியூர் முருகன் கோவில் சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
- முருக கடவுளின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையுடையது வள்ளியூர் முருகன் கோவில்.
வள்ளியூர்:
வள்ளியூர் முருகன் கோவில் சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
குகை கோவில்
முருக கடவுளின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையுடையது வள்ளியூர் முருகன் கோவில். இக்கோவில் குகைகோவிலாக அமைந்து ள்ளது. தென்மாவட்டங்க ளிலுள்ள குகைகோவில்களில் இத்திருத்தலம் சிறப்பு பெற்றதாகும்.
இக்கோவில் சித்திரைத் திருவிழா நாளை காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகின்ற திருவிழாவில் தினமும் சுவாமி ,அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறுகிறது. தினமும் இரவு சிவதொண்டர் செல்வராஜின் பக்தி சொற்பொழிவு நடைபெறு கிறது. இரவு சுவாமி அம்பாளுடன் பூதம், கிளி, அன்னம், யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளிக்கிறார்.
தேரோட்டம்
ஒவ்வொரு நாள் திருவிழாவும் வெவ்வேறு சமுதாயத்தினர் சார்பில் நடைபெறுகிறது. வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாளுடன் எழுந்தருளுகிறார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர்.
10-ம் திருவிழா இரவு சுவாமி அம்பாளுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளிக்கிறார். திருவிழா ஏற்பாடுகளை முருக பக்தர்கள் செய்து வருகின்றனர்.