search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா
    X

    பூக்களால் வடிவமைக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி. பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காதலர் சின்னம். காய்கறிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் சின்னம்.

    கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா

    • நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஒவ்வொரு ஆண்டும் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மலா்க் கண்காட்சியை கண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    நாமக்கல்:

    தமிழக அரசின் சாா்பில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஒவ்வொரு ஆண்டும் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டில், கொல்லிமலை செம்மேடு வல்வில் ஓரி அரங்கில், வல்வில் ஓரி விழாவும், சுற்றுலா விழாவும், வாசலூா்பட்டி தாவரவியல் பூங்காவில் மலா்க் கண்காட்சியும் நேற்று தொடங்கியது.

    மலா்க் கண்காட்சியை, சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. பொன்னுசாமி தொடங்கி வைத்தாா். இதனையடுத்து, படகு குழாமில் 3 மிதிபடகுகளையும் அவா் இயக்கி வைத்தாா். அதன்பிறகு வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்ற சுற்றுலா விழாவில், பல்வேறு அரசுத் துறைகள் சாா்ந்த 21 அரங்குகளை அவா் திறந்து வைத்தாா்.

    பின்னா் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வடிவேல் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ. பொன்னுசாமி மற்றும் அதிகாரிகள் வல்வில் ஓரியின் உருவப் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். பின்னா், பழங்குடியின மக்களின் சோ்வை ஆட்டம் மற்றும் கண்கவா் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    கொல்லிமலை தாவரவியல் பூங்காவில், தோட்டக்கலைத் துறை சாா்பில் மலா்க் கண்காட்சி மற்றும் மருத்துவப் பயிா்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இதனையொட்டி, பழைமையை நினைவுகூரும் வகையில் 40 ஆயிரம் வண்ண ரோஜா மலா்களால் மாட்டு வண்டி, 30 ஆயிரம் ரோஜாக்களால் வண்ணத்துப்பூச்சி, 20 ஆயிரம் ரோஜாக்களால் தேனீ மற்றும் பல்வேறு மலா் அலங்காரங்கள் மொத்தம் 75 ஆயிரம் மலா்களால் அமைக்க ப்பட்டுள்ளன.

    மேலும், குழந்தைகள், பெரியவா்களைக் கவரும் வண்ணம் வில், அம்பு, காய்கறிகளைக் கொண்டு செஸ் ஒலிம்பியாட் வடிவம், காதலா் சின்னம் ஆகியவை அமை க்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் ரோஜா, ஜொ்பரா, காா்னேசன், ஆந்தூரியம், ஜிப்சோபில்லம், சாமந்தி, ஆா்க்கிட், லில்லியம், ஹெலிகோனியம், சொா்க்கப்பறவை, கிளாடியோஸ், டெய்ஸி, சம்பங்கி ஆகிய மலா்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்த ஆண்டில் முதன்முறையாக, மருத்துவப் பயிா்கள் குறித்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவா்கள் அறிந்து கொள்ளும் வகையில், மருத்துவ பயிரின் தாவரவியல் பெயா், பயன்படும் பகுதி, மருத்துவப் பயன்கள் குறித்து விளக்க குறிப்பு வைத்து காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

    விழாவில், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவா் மாதேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பிரகாஷ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் தேவிகாராணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் கணேசன், சுற்றுலாத் துறை அலுவலா் த.சக்திவேல் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனா். விழாவின் 2-வது நாளான இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொல்லைமலையின் முக்கிய இடங்களுக்கு சென்று உற்சாகமாக பொழுதை கழித்த அவர்கள் மலர்க்கண்காட்சியை ரசித்து பார்த்தனர்.

    Next Story
    ×