search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்- சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய  வாலிபர் கைது
    X

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்- சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய வாலிபர் கைது

    • திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி-நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன்.
    • பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி-நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (வயது 28) இவர் கடந்த 17-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் அவர் மீது வளையாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் விக்ரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் பெங்களூரில் தலைமறைவாக இருந்த கோடீஸ்வரனை கைது செய்தனர். அவர்மீது பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக வீண் வதந்தியை பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×