என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் பல்வேறு வடிவங்களில் தயாராகும் விநாயகர் சிலைகள் - ரூ.100 முதல் ரூ. 23 ஆயிரம் வரை விற்பனைக்கு குவிகிறது
- விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி ( புதன் கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
- பாளை சமாதானபுரம், கிருபா நகர், மார்க்கெட் பகுதிகள், சீவப்பேரி சாலை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி ( புதன் கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வார்கள்.
தொடர்ந்து வழிபட்ட சிலைகளை கடல், ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைப்பார்கள்.நெல்லையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
பாளை சமாதானபுரம், கிருபா நகர், மார்க்கெட் பகுதிகள், சீவப்பேரி சாலை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது.
ஒரு அடி உயரம் முதல் 9 அடி உயரம் வரை சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறைந்த பட்சமாக விநாயகர் சிலை ரூ.100 முதலும், அதிக பட்சமாக பெரிய சிலைகள் ரூ.27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
பொதுஇடத்தில் விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்காக பலர் கடந்த மாதமே ஆர்டர்கள் கொடுத்துள்ளனர்.
சிவன், பார்வதியுடன் கூடிய விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடி வங்களிலும், வண்ணங்களிலும் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் தயார் செய்யப்படும் சிலைகள் கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சிலைகளை செய்வதற்கு அறி வுறுத்தப்ப ட்டுள்ளது. இதனால் காகித கூல், தேங்காய் நார்கள், நீரில் கரையும் வண்ணங்கள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி சிலைகள் செய்யப்படுகிறது.
சிலைகள் செய்யும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். லெட்சுமி விநாயகர், ராஜ விநாயகர், 3 முகம் கொண்ட விநாயகர், நந்தி விநாயகர், சிவன் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தென்காசி, செங்கோட்டை உள்ளிடட தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலும் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்