என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி சித்தர் பீடத்தில் வருஷாபிஷேக விழா
- வருஷாபிஷேக விழா, அமாவாசை யாக வழிபாடுகளை முன்னிட்டு காலை நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லெட்சுமிபூஜை, கோ பூஜை, கன்னிகா பூஜையும் நடந்தது.
- பிரத்தியங்கிராதேவி-கால பைரவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேகம், மஹா யாகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகரிலுள்ள சித்தர் பீடத்தில் மஹா பிரத்தியங்கிராதேவி-மஹா கால பைரவர், குருமகா லிங்கேஸ்வரர், மங்களம் தரும் சனீஸ்வரர், ஸ்ரீவாராஹி அம்மன், மஹா சரஸ்வதி-மகாலெட்சுமி தேவி, வீரணார், முனீஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
தென்தமிழகத்தில் மிகவும் ஆன்மிக சிறப்பு பெற்றுள்ள இக்கோவிலில் நேற்று வருஷாபிஷேக விழா மற்றும் அமாவாசை யாக வழிபாடுகள் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் வருஷாபிஷேக விழா மற்றும் அமாவாசை யாக வழிபாடுகள் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து காலை நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லெட்சுமிபூஜை, கோ பூஜை, கன்னிகா பூஜையும் நடந்தது.
தொடர்ந்து மதியம் மஹா பிரத்தியங்கிராதேவி-கால பைரவர், மஹாசரஸ்வதி-மகாலெட்சுமிதேவி, குரு மகாலிங்கேஸ்வரர், ஸ்ரீவாராஹி அம்மன், சனீஸ்வரர் உள்ளிட்ட பரிவாரதேவதா சமேத தெய்வங்கள் மற்றும் மூலஸ்தான வருஷாபிஷேக விழா ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.
வருஷாபிஷேகத்தினை சித்தர் பீடத்தின் சுவாமிகள் சீனிவாச சித்தர் நடத்தினார். இதில் மலேசிய தொழில் அதிபர்கள் சேகர், ராம கிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
வருஷாபிஷேகத்தினை தொடர்ந்து, பிரத்தியங்கிராதேவி-கால பைரவர், மஹாசரஸ்வதி-லெட்சுமிதேவி, குருமகாலிங்கேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், மஹா யாகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பிரத்தியங்கிரா தேவி-காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சீனிவாச சித்தர் தலைமையில் சித்தர்பீடத்தினர், மகளிர்அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்