search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேடசந்தூர்: நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு
    X

    நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார்.

    வேடசந்தூர்: நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு

    • வேடசந்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார்
    • ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது கைரேகை பதிவுகளில் சில நேரங்களில் சிரமங்கள் ஏற்படுவதால் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் தெரிவித்ததாவது,

    திண்டுக்கல் மாவட்ட த்தில் 10 வட்டங்களிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்கள் உள்ளன. குஜிலியம்பாறை மற்றும் திண்டுக்கல் மேற்கு வட்டங்களில் மட்டும் குடோன்கள் இல்லாமல் இருந்தது. அங்கும் குடோ ன்கள் கட்டுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 300 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களை சீரமைக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன்படி குடோன்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேடசந்தூர் குடோனில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 36,000 ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் தரமானதாக வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து ரேசன் கடைகள் மூலம் தரமான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நெல் அரவை செய்வதற்காக 700 அரவை ஆலைகள் தேர்வு செய்யப்பட்டு கருப்பு, பழுப்பு நிற அரிசி இல்லாத வகையில் கலர்சாப்டர் பொருத்தப்பட்ட எந்திரங்கள் மூலம் தரமான அரிசி உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

    ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது கைரேகை பதிவுகளில் சில நேரங்களில் சிரமங்கள் ஏற்படுவதால் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் 30 சதவீத பணிகள் முடிக்கவும், இன்னும் 9 மாதங்களில் பணிகள் முழுமையாக முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது காந்திராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×